Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் தங்க இறக்குமதி 918 டன்னைத் தாண்டும்!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2011 (20:58 IST)
உலகில் மிக அதிகமாக தங்க ஆபரணங்களைப் பயன்படுத்தும் மக்களைக் கொண்ட நமது நாட்டின் தங்க இறக்குமதி 2010ஆம் ஆண்டில் 918 டன்களை எட்டியது. இந்த சாதனை அளவை விட அதிகமாக இந்த ஆண்டில் இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி 578.50 டன்களாக இருந்தது. அது 2010ஆம் ஆண்டில் 66 விழுக்காடு அதிகரித்து 963.1 டன்னாக அதிகரித்தது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உலக தங்கப் பேரவையின் இந்தியா, கிழக்காசியாவிற்கான மேலாண்மை இயக்குனர் அஜய் மித்ரா, இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரியிலேயே தங்க இறக்குமதி 100 டன்னிற்கு வந்துள்ளது. இது மேலும் உயர வாய்ப்புள்ளது. ஏனெனில் விவசாய உற்பத்தியும், பொருளாதார வளர்ச்சியும் தங்க விற்பனையை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் தங்க ஏற்றுமதி 85 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் 10 கிராம் விலை ரூ.21,050 ஆக உள்ளது. பன்னாட்டுச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,387க்கு விற்கிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments