Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்பிஐ நிதிக்கொள்கை வெளியீடு வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்வு

ஆர்பிஐ நிதிக்கொள்கை வெளியீடு வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்வு
, சனி, 21 செப்டம்பர் 2013 (17:18 IST)
FILE
ரிசர்வ் வங்கி தன்னுடைய காலாண்டு இடைக்கால நிதிக்கொள்கையில், குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ) 0.25 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால் வீடு, கார் உள்ளிட்ட கடன்களின் வட்டி விகிதம் உயரும்.

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுள்ள ரகுராம் ராஜன், முதல் முறையாக ஆர்பிஐயின் காலாண்டு இடைக்கால நிதிக்கொள்கையை நேற்று வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 0.25% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்ரோ வட்டி விகிதம் 7.5% ஆக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து வர்த்தக வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 0.75% குறைக்கப்பட்டு 9.5% ஆக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச தினசரி இருப்புத்தொகை 99%தில் இருந்து 95% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான வட்டி தொடர்ந்து 4 % ஆக இருக்கும். விலைவாசி கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.

நடப்பாண்டில் மீதமுள்ள மாதங்களில் மொத்த விலைப்புள்ளி எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே இருக்கக்கூடும். பொருளாதார வளர்ச்சி, வளத்தை காட்டிலும் குறைவாகவே உள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்கள் கால தாமதம் ஆகின்றன. புதிய திட்டங்கள் முடங்கி உள்ளன. ஆர்பிஐயின் அடுத்த நிதிக்கொள்கை அக்டோபர் 29ம் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டுள்ளதால், வீடு, கார், சில்லரை கடன்களுக்கான வட்டி விகிதத்தை உடனடியாக வங்கிகள் உயர்த்தும். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கூடியுள்ள நிலையிலும், அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பை தொடர்ந்தும், வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக வட்டி விகிதத்தை ஆர்பிஐ உயர்த்தியுள்ளது. இது தொழில்துறையினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நிதிக்கொள்கையை வெளியிட்டு ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், "குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருந்தாலும், அதை ஈடுகட்டும் வகையில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், வர்த்தக வங்கிகள் கடன் வட்டியை உயர்த்தாது" என்றார். ஆனால், நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தலைவர் பிரதீப் சவுத்ரி கூறுகையில், "பண்டிகை சீசனால் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil