Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் தேர்தல் செலவை இந்திய மக்களவைத் தேர்தல் விஞ்சும்

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2009 (18:42 IST)
இந்தியாவில் விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக செலவிடப்படும் தொகை, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவிட்ட தொகையை விஞ்சும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ் என்ற ( Centre for Media Studie s) என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், வரும் மக்களவைத் தேர்தலுக்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்க அதிபர் (2008-09) தேர்தலில் போட்டியிட்ட பராக் ஹுசைன் ஒபாமா உள்ளிட்ட வேட்பாளர்களால் செலவு செய்யப்பட்ட 1.8 பில்லியன் டாலர் (ரூ.8 ஆயிரம் கோடி) தொகையை விட சுமார் 2 ஆயிரம் கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் செலவிடப்பட்ட தொகை சுமார் ஓராண்டு காலத்தில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய மக்களவைத் தேர்தலுக்காக செலவிடப்பட உள்ள ரூ.10 ஆயிரம் கோடி ஓரிரு மாதங்களில் செலவிடப்பட உள்ளது.

தேர்தலுக்காக செலவிடப்பட உள்ள ரூ.10 ஆயிரம் கோடியில் 25% பணம், வாக்காளர்களுக்கு வழங்குவது, சட்டத்திற்கு புறம்பாக செலவழிப்பது என அதிகாரப்பூர்வமற்ற முறையில் செலவிடப்படும் என்றும் அந்நிறுவனம் கணித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments