Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்கா:ஜெனரல் மோட்டார் திவாலா

அமெரிக்கா:ஜெனரல் மோட்டார் திவாலா
நியுயார்க்: , செவ்வாய், 2 ஜூன் 2009 (13:37 IST)
அமெரிக்காவின் புகழ் பெற்ற வாகன தாயரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார், நேற்று திவாலா மனுவை சமர்ப்பித்தது. அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள ஜெனரல் மோட்டார் நிறுவனத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வாகன உற்பத்தி துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் கடும் நஷ்டம் அடைந்துள்ளன. இதனை சீர்படுத்துவதற்காக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் ஒபாமாவின் அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல், அதன் பங்குகளை வாங்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்நிலையில், ஜெனரல் மோட்டார் நிறுவனம் நேற்று நியுயார்க் நகர நீதி மன்றத்தில், அந்நாட்டு திவாலா சட்டம் 11 வது விதியின் கீழ், திவாலா மனுவை தாக்கல் செய்தது.

இதற்கு 82.29 பில்லியன் டாலர் மதிப்பிற்கு சொத்துக்கள் உள்ளன. அதே நேரத்தில் இரண்டு மடங்கிற்கு அதிகமாக கடன்கள் உள்ளன. இது 172.81 பில்லியன் டாலர் கடன்கள் இருப்பதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசு இந்த கடனில் 50 பில்லியன் டாலரை, அரசின் பங்குகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

ஜெனரல் மோட்டார் குழுமத்தின் துணைத் தலைவர் நிக் ரியிலி கூறுகையில், அமெரிக்க அரசின் ஆதரவுடன் நாங்கள் எடுத்துள்ள முடிவு சரியானது என கருதுகின்றோம். இதனால் கூடிய விரைவில் மீண்டும் சிறந்து இயங்குவதுடன், இலாபகரமாக இயங்கவும் தொடங்கும் என்று கூறினார்.

இது குறித்து இந்தியாவில் உள்ள ஜெனரல் மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் உள்ள ஜெனரல் மோட்டார் நிறவனம் எவ்வித பாதிப்பும் இல்லாமல், எப்போதும் போல் இயங்கும். அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள திவாலா மனுவில், இந்தியாவின் ஜெனரல் மோட்டார் நிறுவனம் இடம் பெறவில்லை.

இந்தியாவில் உள்ள ஜெனரல் மோட்டார் விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர் சேவை பிரிவு, வாகனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதம் எப்போதும் போல் தொடரும் என்று கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil