Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரிச் சொர்க்க இரகசியகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: உலக சமூக அமைப்புகள் கோரிக்கை

வரிச் சொர்க்க இரகசியகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: உலக சமூக அமைப்புகள் கோரிக்கை
, புதன், 9 பிப்ரவரி 2011 (13:21 IST)
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், சில குட்டித் தீவுகளிலும் இயங்கிவரும் வரியற்ற சுவர்க்க நாடுகளில் இயங்கி வரும் வங்கிகளில் உள்ள கணக்குகளின் இரகசியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு உலகின் முன்னணி சமூக உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் ஊழலில் கொள்ளையடித்த பணம் பெரும்பாலும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வரிச் சொர்க்க நாடுகளின் (Tax havens) வங்கிகளில்தான் போட்டு வைக்கபட்டுள்ளன. இந்த வங்கிகளின் இரகசிய கணக்குகளில் பணம் போட்டு வைத்திருப்போர் விவரங்களை அந்த வங்கியோ அல்லது அந்த வங்கி இயங்கும் நாடுகளோ வெளியிடுவதில்லை.

இந்த நிலையில், இந்த நாடுகளில் உள்ள இரகசிய கணக்குகளில் உள்ள பண விவரங்களை வெளியிட்ட குளோபல் பைனான்சியல் இண்டகிரிட்டி எனும் அமைப்பு, உலகின் இதர சமூக அமைப்புகளுடன் இணைந்து, இப்படிப்பட்ட கணக்கு இரகசியங்களுக்கு முற்றுப்பள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

ஃபிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி உள்ளிட்ட ஜி 20 நாடுகளின் தலைவர்களுக்கு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரகசிய கணக்குகள் அளிக்கும் பாதுகாப்பினால் ஒவ்வொரு நாட்டிலும் ஊழல் வாதிகளும், குற்றவாளிகளும் தாங்கள் கொள்ளயடித்த பணத்தை மிகச் சுலபமான மக்களின் கண்களில் இருந்து மறைத்து இப்படிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வைத்து பாதுகாக்கின்றனர். இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க உலகின் பொருளாதார ரீதியான வளர்ந்த ஜி20 நாடுகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குளோபல் பைனான்சியல் இண்டகிரிட்டி அமைப்பு வளரும் நாடுகளில் இருந்து கொள்ளையடித்து கொண்டு செல்லப்பட்டு இப்படிப்பட்ட இரகசிய கணக்குகளில் போட்டு வைத்துள்ள பணத்தின் - 2000 முதல் 2009வரையிலான ஆண்டுகளுக்கான - விவரங்களை வெளியிட்டது. அதன்படி, 2008ஆம் ஆண்டில் மட்டும் 1.23 டிரில்லியன் டாலர் இரகசிய கணக்குகளில் போடப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil