Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி சரிவு

நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி சரிவு
, வியாழன், 18 ஜூலை 2013 (18:04 IST)
FILE
தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளதால் கடந்த ஜூன் மாதத்திலிருந்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.

இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 41 சதவீதம் குறைந்து 230 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு தலைவர் கூறுகையில், "தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் ஆபரணத்தை தயாரிப்பதற்கு போதுமான தங்கம் கிடைக்காத காரணத்தால் கடந்த ஜூன் மாதத்தில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும், தங்கத்தின் இறக்குமதி விரைவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கிறோம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil