Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: டிராவில் முடிந்த போர்ச்சுகல் - ஸ்பெயின் போட்டி

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (12:22 IST)
ரஷ்யாவில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த போட்டி 3-3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
 
உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்று முன்தினம் பிரமாண்டமாக ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இதில் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த போர்ச்சுகல்- ஸ்பெயின் அணிகள் மோதின.
 
இந்த போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார். பின்னர் 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் கோஸ்டா கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமமானது. இதனையடுத்து ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 2-1 என்ற நிலையில் முதல் பாதி முடிந்தது.
 
இதைத்தொடந்து போட்டியின் இரண்டாவது பாதியின் 55-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் கோஸ்டா மீண்டும் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் மீண்டும் 2-2 என சமமானது. பின்னர் 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்காக நாச்சோ  கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 3-2 என முன்னிலை பெற்றது. பின்னர் போட்டியின் கடைசி நேரத்தில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார் . இதனால் ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சமமானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments