உலகக்கோப்பை கால்பந்து: இன்றைய ஆட்டங்களின் முழு விபரம்

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (15:01 IST)
ஃபிபா உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் போர்ச்சுகல்- மொராக்கோ, உருகுவே- சவுதி அரேபியா, ஈரான்- ஸ்பெயின் அணிகள் மோதவுள்ள மூன்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
 
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொலம்பியா அணிக்கு எதிரான போட்டியில் ஜப்பான் அணியும், போலந்து அணிக்கு எதிரான போட்டியில் செனகல் அணியும், எகிப்து அணிக்கு எதிரான போட்டியில் ரஷியா அணியும் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் போர்ச்சுகல்- மொராக்கோ அணிகள் மோதுகின்றன. மோர்ச்சுகல் அணி விளையாடிய கடைசி ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனதால். இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெறும் நோக்கில் அந்த அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் உருகுவே- சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. இரண்டு முறை உலக சாம்பியனான உருகுவே அணி ஏற்கனவே கடந்த போட்டியில் எகிப்து அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
 
அதையடுத்து, இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஈரான்- ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. ஸ்பெயின் அணி விளையாடிய கடைசி ஆட்டம் டிராவில் முடிவடைந்ததால் ஈரானுக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

கோஹ்லி, ரோஹித்துக்கு ரூ.4 கோடி சம்பளம் குறைப்பா? பிசிசிஐ சொல்வது என்ன?

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments