Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகுந்தா.. முகுந்தா..!

Webdunia
கலாச்சாரங்களில் பின்னிப் பிணைந்தது நம் பாரதம்! இங்கு நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு பின்னணி உண்டு. இவை ஒவ்வொன்றும் நமக்கு பல உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன.

நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் 'கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் 'ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது.

எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில்
webdunia photoFILE
சிறைக்குள் வசுதேவர்- தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார்.

பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான். பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான்.

மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது. தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் இளமைப் பருவம் கேட்பதற்கே இனிமையாக இருக்கும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக வளர்ந்த கிருஷ்ணன், குறுப்புக்காரச் சிறுவனாகவும் இருந்தான்.

webdunia photoFILE
ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை அவிழ்த்து விடுவது, நீர் ஏந்தி வரும் பெண்களின் குடங்களை கல் விட்டு உடைப்பது, மண்ணைத் திண்பது, வெண்ணையை திருடி உண்பது போன்றவை அவரது விளையாட்டுக்களில் சில.

கிருஷ்ண ஜெயந்தியின் போது வீடுகளில் குதூகலம் நிறைந்திருக்கும். வாசல் முழுக்க கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை செல்லும் சின்னச் சின்ன காலடிச் சுவடுகளை கோலமிடுவார்கள்.

கிருஷ்ண ஜெயந்திக்கு இனிப்புப் பலகாரங்கள், குறிப்பாக கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணெய், அவல் மற்றும் பழங்கள், கார வகைகள் நிவேதனம் செய்யப்படும். பூஜைக்குப் பின் வெண்ணெய்யை உண்டு பெண்கள் விரதம் முடித்துக் கொள்வார்கள்.

மாயக் கண்ணன் இளமையில் செய்த சேஷ்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும். அவற்றை போற்றும் வகையில், கிருஷ்ண ஜெயந்தியன்று உறியடித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

பாண்டவர்களுக்கு உதவியாக இருந்த கிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசித்த மொழிகளையே நாம் 'பகவத்கீதை'யாகப் போற்றி வருகிறோம்.

கண்ணன், முகுந்தன், கோபால கிருஷ்ணன், நந்த கோபாலன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் குழந்தைக் கிருஷ்ணனை, கோகுலாஷ்டமி தினத்தன்று நாமும் நம் வீடுகளில் வரவேற்று, வளம் பெறுவோம்!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசனம் நிகழ்ச்சி: குவிந்த பக்தர்கள் கூட்டம்..!

நாளை மகரஜோதி தரிசனம்.. புக் செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி! - சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்!

இந்த ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (13.01.2025)!

தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – விருச்சிகம் | Pongal Special Astrology Prediction 2025

தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – துலாம் | Pongal Special Astrology Prediction 2025

Show comments