Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிச‌ம்ப‌ர் 9ஆ‌ம் தே‌தி பக்ரீத் பண்டிகை

Webdunia
திங்கள், 8 டிசம்பர் 2008 (12:59 IST)
டிசம்பர் 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இன்றைய தினமே முஸ்லிம் மக்கள் பண்டிகை கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டுள்ளனர்.

மசூதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. அ‌ன்றைய ‌தின‌ம் அ‌திகமான ம‌க்க‌ள் மசூ‌திக‌ளி‌ல் கு‌விவா‌ர்க‌ள் எ‌ன்பதா‌ல் பாதுகா‌ப்பு‌ம் பல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ப‌க்‌ரீ‌த் ப‌‌ண்டிகையை மு‌ன்‌னி‌ட்டு, ஒ‌ட்டக‌ங்க‌ள், ஆடு, மாடுகளை கு‌ர்பா‌னி கொடு‌த்து, இறை‌ச்‌சியை ஏழை ம‌க்க‌ள் ம‌ற்று‌ம் உற‌வின‌ர்களு‌க்கு தானமாக‌க் கொடு‌ப்பது மு‌ஸ்‌லி‌ம்க‌ளி‌ன் வழ‌க்க‌ம். இத‌ற்காக ராஜ‌ஸ்தா‌ன், ஆ‌ந்‌திர மா‌நிலம‌் கட‌ப்பா‌வி‌ல் இரு‌ந்து லா‌ரி‌யி‌ல் ஒ‌ட்டக‌ங்க‌ள் செ‌ன்னை‌க்கு‌க் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டு‌ள்ளன. மேலு‌ம் நூ‌ற்று‌க்கண‌க்கான ஆடுகளு‌ம் செ‌ன்னை‌யி‌ல் கு‌வி‌ந்து‌‌ள்ளன.

மும்பைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பக்ரீத் தொழுகைக்குச் செல்லும்போது கைகளில் கருப்புத் துணிப் பட்டையை சுற்றிச் செல்வதுடன், அமைதி மற்றும் ஒற்றுமைக்காக தொழுமாறு மகாராஷ்டிர ஐக்கிய தேசிய சங்கத்தின் பொதுச் செயலர் கே.ஏ.ஏ.சையது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம் பக்களுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்.

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – கன்னி!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – சிம்மம்!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – கடகம்!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – மிதுனம்!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – ரிஷபம்!

Show comments