மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையமானது கூட்டு பாதுகாப்பு சேவைகள் தேர்வு - 2008 முடிவுகளை அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் இவ்வாண்டு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள ஆண்களுக்கான (236 பேர்) 90வது குறுகிய சேவை கமிஷன் படிப்பு மற்றும் பெண்களுக்கான 4-வது குறுகிய சேவை கமிஷன் (தொழில்நுட்பம் அல்லாதது) படிப்பு (24 பேர்) ஆகியவற்றுக்கான அட்மிஷனுக்கு மொத்தம் 260 பேர் இறுதியாக தகுதி பெற்றுள்ளனர்.
இதில் தேர்வு பெறுவோர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, கேரளாவின் எழிமலையில் உள்ள கடற்படை அகாடமி மற்றும் ஐதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமி ஆகியவற்றில் பயிற்சி பெறுவர். இவற்றில் அட்மிஷன் பெறுவதற்கு இதே தேர்வு முடிவின் அடிப்படையில் முன்பு பரிந்துரை செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்களையும் ஆண்களுக்கான 90-வது குறுகிய சேவை கமிஷன் படிப்பு பட்டியல் உள்ளடக்கியுள்ளது.
அரசு தெரிவித்தபடி ஆண்களுக்கான 90வது குறுகிய சேவை கமிஷன் படிப்புக்கான காலி இடங்களின் எண்ணிக்கை 175. பெண்களுக்கான குறுகிய சேவை கமிஷன் (தொழில்நுட்பம் அல்லாதது) படிப்புக்கான காலி இடங்களின் எண்ணிக்கை 29.
தகுதிப் பட்டியலை தயாரிப்பதற்கு விண்ணப்பதாரர்களின் மருத்துவ தேர்வு முடிவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமானவையே.
விண்ணப்பதாரர்கள் எந்தவொரு தகவலையும் விளக்கத்தையும் வேலை நாட்களில் நேரிலோ அல்லது 011-2338 5271, 011 -2238 1125 மற்றும் 011-2309 8543 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவி மையத்தில் பெறலாம். தேர்வு முடிவுகளும் இதர விவரங்களும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.