Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“பூமியை தாக்கிய டைனோசர்களின் குசு”

Webdunia
செவ்வாய், 8 மே 2012 (18:31 IST)
FILE
பிரம்மாண்ட டைனோசர்களின் குசு(மலக்காற்று) ஒரு காலத்தில் பூமியை பெரும் அளவில் வெப்பமைடைய செய்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டிஷ் அறிவியலாளரான டேவிட் வில்கின்சன் மற்றும் அவரது நண்பர்கள் இதுக்குறித்த ஆய்வறிக்கையை கரண்ட் பையாலஜி என்ற இதழில் வெளியிட்டுள்ளனர்.

மிகப்பெரிய டைனோசர்கள் வாழ்ந்த சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி அதிக வெப்பமடைந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு டைனோசர்களின் குசு கூட காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

அறிவியலாளர்கள், டைனோசர்கள் வெளியிடும் குசு தன்மை எவ்வளவு என்பதை ஆய்வு செய்தனர்.

அப்போது வாழ்ந்த மொத்த டைனோசர்களிடமிருந்து ஆண்டுக்கு 520 மில்லியன் டன் வாயு உற்பத்தியாகியதாம்.

இதில் மீதேன் வாயு அடங்கி உள்ளதாம்.

பொதுவாக ‘கிரீஹவுஸ் கேஸ்’ எனப்படும் மீதேன் வாயு சூரியனிடமிருந்து அகச்சிவப்பு கதிர்வீச்சை உள்வாங்கும் தன்மை உடையது.

இதனால், பூமியில் வெப்பம் அதிகரிக்கும்.

சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாக இருந்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், உயிரினங்களின் மீதேன் உற்பத்தியால் அத்தகைய புவியின் சுழ்நிலையை எவ்வாறு பாதித்துள்ளன என்பதை ஆய்வு பொருளாக வைத்து அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர்.

இதற்காக டைனோசரை எடுத்துக்கொண்ட அவர்கள் இந்த அதிர்ச்சி தகவலை நமக்கு கூறுகின்றனர்.

தற்போது, மீதேன் உற்பத்தியானது, வெவ்வேறு இயற்கை பொருட்களிடமிருந்து 500 மில்லியன் டன் ஆண்டொன்றிற்கு கிடைக்கிறதாம்.

ஆனால், வெறும் டைனோசர்கள் மட்டுமே 520மில்லியன் டன் உற்பத்தி செய்துள்ளன. மேலும், டைனோசர் மட்டுமல்லாமல், மற்ற பொருட்கள் மூலமும் மீதேன் உற்பத்தி நடந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அப்படி என்றால் பாருங்கள்... தற்போதுள்ள வெப்ப அளவை விட சுமார் 150, 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு வெப்பம் இருந்திருக்கும் என்று...

Article Summary:
Giant dinosaurs could have warmed the planet with their flatulence, say researcher s
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலியான பாலியல் பலாத்காரம் புகார்.. பெண் ஐடி ஊழியர் கைது..!

10 ஆண்டுகளுக்கு முன் தாய் அவமதிப்பு.. காத்திருந்து பழிவாங்கிய மகன்.. சினிமா போல் ஒரு சம்பவம்..!

துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரம்: இரு அவைகளும் அமளியால் ஒத்திவைப்பு..!

சென்னை விமான நிலையத்தில் முன் பதிவு டாக்சிகளுக்கு ஆன்லைன் வசதி: பயணிகளுக்கு பெரும் நிம்மதி!

ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

Show comments