விண்வெளியில் தூசியின் அளவு இரட்டிப்பு

Webdunia
பூமண்டலத்தின் விண்வெளியில் தூசின் அளவு 20ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச்சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகியவற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.

மனித உற்பத்தி நடவரிக்கைக் காரணங்கலல்லாது இயற்கையில் நிக்ழும் இந்த தூசு மண்டலம் பற்றிய ஆய்வு இந்த நூற்றாண்டிலேயே நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

பாலைவன தூசுகள், மண்ணின் நுண்துகள்கள், ஆகியவற்றின் அளவு விண்வெளியில் அதிகரித்துள்ளது என்பதை இவர் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையிலும் கணினி மாதிரிகளிலும் சோதனை செய்து கூறியுள்ளார்.

பாலைவன தூசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன்றையொன்று பல்வேறு இடைப்பட்ட அமைப்புகள் மூலம் பாதித்துக் கொள்பவை. பொதுவாக தூசுமண்டலம் சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து காக்கிறது. இதனால் மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் கரியமில வாயுவினால் ஏற்படும் புவிவெப்பமடைதல் நடவடிக்கை சற்றே குறைகிறது.

ஆனால் இதே தூசு மண்டலம்தான் மேகத்தின் செயல்பாட்டிலும் குறுக்கிட்டு மழையை தடுத்து இதன் மூலம் கடும் வறட்சி ஏற்பட்டு இதனால் இந்த புதிய வறட்சியால் மேலும் தூசிகள் விண்வெளிக்குச் செல்லும் ஆபத்தும் உள்ளது.

மேலும் தூசுகளைப் பொறுத்தவரை கடல்நீர் ரசாயனத்திலும் தாக்கம் செலுத்துகிறது. தூசுதான் இரும்பின் மூலாதாரம். இதன் மூலம்தான் கடல் நீரின் மேற்பரப்பு, ஆழப்பகுதிகளில் வாழும் நுண்ணுயிரிகள் தங்களுக்குத் தேவையான கரியமிலவாயுவை உறிஞ்சுகிறது.

ஆய்வாளர்கள் பனிப்படலங்கள், ஏரியின் படிவுகள், மற்றும் பவளப்பாறை மாதிரிகளை எடுத்து பாலைவன தூசின் தன்மைகளை ஆராய்கின்றனர்.

கடல்நீரில் படிந்துள்ள தூசியினால் விண்வெளியில் உள்ள கரியமிலவாயு கடந்த 100 ஆண்டுகளில் 6% குறைந்துள்ளது.

இது வரை வந்த ஆய்வுகள் மனித உற்பத்தி நடவடிக்கைகளினால் ஏற்படும் தூசி அதன் விளைவுகளை ஆராய்ந்துள்ள நிலையில் இந்த ஆய்வு இயற்கைத் தூசிகளின் நன்மை தீமைகளை மேலும் வெளிக்கொணரும் என்று கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

Show comments