Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவில் வெப்ப அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2012 (14:54 IST)
புவி வெப்பமடைதல் பற்றி உலக நாட்டு விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பேசி வருகின்றனர். அவர்கள் கூறியதன் உண்மை சிறிது சிறிதாக விளைவில் தெரியவந்தபடியே உள்ளது. ஆஸ்ட்ரேலியாவுக்கு அடுத்த படியாக ரஷ்யாவில் தற்போது வெப்ப அளவு கடுமையாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

கடந்த நூற்றாண்டில் மட்டும் ரஷ்யாவில் வெப்ப அளவு இருமடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் ரஷ்யாவில் சராசரியாக வெப்ப அளவு 1.5டிகிரி செல்சியஸ் உயர்ந்து வந்துள்ளது. இது உலக புவிவெப்பமடைதலின் அளவைக் காட்டிலும் இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆண்டுவாரிக் கணக்கில் கூட ரஷ்ய வெப்ப நிலை அதிகரித்துள்ளதோடு, திடீர் வெள்ளப்பெருக்கின் அதிகரிப்பும் வெப்பம் அதிகரித்தலை உறுதி செய்கிறது.

21 ஆம் நூற்றாண்டில் நாம் இப்போது இருக்கிறோம் இருந்தாலும் ரஷ்யாவில் இந்த 11 ஆண்டுகளில் வெப்ப நிலை அதிகரித்தே வந்துள்ளது. பனிப்பிரதேசமான சைபீரியாவில் இதன் பாதிப்பு அதிகமடைந்துள்ளது. ரஷ்ய ஆர்க்டிக் பகுதியிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் பல பகுதிகளில் நீர்வரத்து அதிகமாகவும் மேலும் பல பகுதிகளில் வறட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த நாட்டு அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

Show comments