Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெ‌ரினா‌வி‌ல் ‌பிளா‌ஸ்டி‌க் பொரு‌ட்களு‌க்கு‌த் தடை

மெ‌ரினா‌வி‌ல் ‌பிளா‌ஸ்டி‌க் பொரு‌ட்களு‌க்கு‌த் தடை
, புதன், 1 ஜூலை 2009 (11:34 IST)
சு‌ற்று‌ப்புழ‌ச் சூழலை மாசுபடு‌த்து‌ம் ‌பிளா‌ஸ்டி‌க் பொரு‌ட்களு‌க்கு படி‌ப்படியாக தடை ‌வி‌தி‌க்க ம‌த்‌திய, மா‌நில அரசுக‌ள் நடவடி‌க்கை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன. அத‌ன்படி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஆகஸ்டு 15-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு‌ள்ளது.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று காலையில் நடைபெற்றது. கூ‌ட்ட‌த்‌தி‌னஇறு‌தி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிசெ‌ன்னமாநகரா‌ட்‌சி மேய‌ர் மா. சு‌ப்ரம‌ணிய‌ன், சென்னையை அழகுபடுத்தும் விதத்தில் மெரினா கடற்கரையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்கு பிறகு மெ‌ரினா கட‌ற்கரை‌யி‌ல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து இருக்கிறோம். நவீன கழிவறைகளையும் அங்கே நாங்கள் அமைத்து வருகிறோம் எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil