கரியமிலவாயு வெளியேற்றம் கடுமையாக அதிகரிப்பு

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2011 (14:41 IST)
நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு பயன்பாடுகளினால் வெளியேறும் கரியமிலவாயு வெளியேற்றம் கடந்த 20 ஆண்டுகளில் 49% அதிகரித்து 2010ஆம் ஆண்டு 10பில்லியன் டன்களாக உயர்ந்துள்ளதாக விஞ்ஞானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீமைக்குப் பங்களிப்பு செய்த முக்கிய நாடுகள் வருமாறு: அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம்.

உலக கரியமில வாயு ஆய்வுத் திட்டத்தைக் கயில் எடுத்து கொண்ட புதிய அமைப்பான கிழக்கு ஆங்க்லியா பல்கலைக் கழகம் இந்த அதிர்ச்சியூட்டும் தக்வலை தெரிவித்துள்ளது.

2010- இல் மட்டும் இயற்கை எரிபொருட்களால் வெளியாகும் கார்பனின் அளவு 5.9% அதிகரித்துள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதாவது கியோட்டோ ஒப்பந்தத்தின் சுட்டு ஆண்டான 1990ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை கரியமிலவாயு வெளியேற்றம் 49% அதிகரித்துள்ளது.

வெளியேறிய கரியமிலவாயுவில் பாதியளவு காற்றில் உள்ளது என்றும் விண்வெளியில் கார்பன் அடைவு மில்லியனுக்கு 389.6 பகுதிகளாக அதிகரித்துள்ளது என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.

மீத கரியமில வாயு அடைவுகள் கடலிலும், காடுகளிலும் உள்வாங்கப்பட்டுள்ளது.

2000- 2010- இல் சராசரி கார்பன் வெளியேற்றம் 3.1% அதிகரித்துள்ளது. சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் மூலம் தங்களது கரியமிலவாயு உற்பத்தி நடவடிக்கைகளை பணக்கார நாடுகள் ஏழை நாடுகளின் பக்கம் திருப்பி விடுகிறது.

வெப்பநிலை அதிகரிப்பும், துருவப்பகுதிகள் மற்றும் ஹிமாலயா உள்ளிட்ட பனிமலைகள் உருகி, கடல் நீர்மட்டம் அதிகரிப்பதும், மிகப்பெரிய புயல்களும், வெள்ளங்களும், வறட்சிகளும் அதிகமாகி வருவதற்கு மூலக் காரணம் புவிவெப்பமடைதலும், கரியமிலவாயு வெளியேற்றமுமே என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

Show comments