ஓசோன் ஓட்டையால் மழை அதிகரிப்பு

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2011 (11:29 IST)
அண்டார்ட்டிக்கா பகுதியில் ஓசோன் மண்டலத்தில் உள்ள ஓட்டையினால் புவியின் தெற்குப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் மழையின் அளவு அதிகரித்துள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொலம்பிய பல்கலைக் கழக் ஆய்வாளர்கள் இந்தக் கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர். துருவப் பகுதிகளில் வானில் ஓசோன் மண்டல ஓட்டைக் காரணமாக பூமியின் தெற்குப் பகுதி முதல் நிலநடுக்கோடு பகுதி வரை கடந்த 50 ஆண்டுகளில் மழை அதிகரித்துள்ளது என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

இந்தக் கண்டுபிடிப்பினால் வானிலை மற்றம், வெப்ப வாயு வெளியேற்றம், புவி வெப்பமடைதல் ஆகியவை பற்றி தீவிர பரிசீலனைத் தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அண்டார்டிகாவின் வான்வெளியில் மிக உயரத்தில் ஓசோன் மண்டல ஓட்டை, ஒரு பகுதியில் மழையை அதிகரித்திருப்பது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று இந்த ஆய்வாளர்களில் ஒருவரான சாரா காங் என்பவர் தெரிவித்தார்.

குளோரோஃபுளோரோகார்பன் என்ற வெப்ப வாயு வெளியேற்றத்தினால் அண்டார்ட்டிக்காவுக்கு மேலே ஓசோன் ஓட்டை ஏற்பட்டதாக 1980ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 1989ஆம் ஆண்டு மாண்ட்ரீல் உடன்படிக்கையில் 196 நாடுகள் கையெழுத்திட்டு குளோரோபுளோரோகார்பன் உற்பத்தியை அடியோடு நிறுத்தியது. ஆனால் ஏற்கனவே விழுந்த ஓட்டையின் விளைவால் வானிலை மாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று இந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கடல் பனி, மேல்புற வெப்ப அளவு, ஓசோன் ஓட்டை ஆகியவற்றை 4 பரிசோதனை மாதிரிகள் மூலம் ஆய்வு செய்த இவர்கள், அதன் மூலம் பெற்ற தரவுகளை வானிலை மாற்ற முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில் கிழக்கு ஆஸ்ட்ரேலியா, தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் தெற்குப ் பசிபிக் குவிமைய மண்டலப் பகுதிகளில் கோடைக்கால பெருமழை பெய்துள்ளதன் காரணம் இதுதான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருடன் கூட்டணி? முடிவை பிப்ரவரி 23ஆம் தேதி அறிவிப்பேன்: டிடிவி தினகரன்

ரூ.1000 விலை மாதாந்திர பாஸ் கட்டணம் குறைப்பு.. சென்னை போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..!

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சனையை விட மெஸ்ஸி வருகை பெரியதா? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?

Show comments