Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மின்கம்பியாள் உதவியாளர் பணிக்கான தகுதித் தேர்வு

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2015 (19:58 IST)
சென்னை அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்கம்பியாள் உதவியாளர் பணிக்கான தகுதித் தேர்வு நவம்பர் 28, 29 ஆம் தேதிகளில்  நடைபெறுகிறது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த பணிக்குறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்கம்பியாள் உதவியாளருக்கான தகுதிகாண் தேர்வு நவம்பர் 28, 29 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையால் நடத்தப்படும் மின்கம்பியாள் உதவியாளருக்கான தகுதித் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு 21- 40 ஆகும்.

இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் அக்டோபர் 16 முதல் நவம்பர் 5 வரை, அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. படிவத்தின் விலை ரூ. 10.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 5 ஆம் தேதியாகும்.

இந்த பணிக்குறித்து மேலும் விவரங்களுக்கு, 044 26252453 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

Show comments