Webdunia - Bharat's app for daily news and videos

Install App

UPSC-யின் பாதுகாப்புத் துறைக்கான தேர்வுகள்: விண்ணப்பிக்க அக்.26 கடைசி

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2009 (15:33 IST)
மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் ( UPS C) நடத்தப்படும் பாதுகாப்புத் துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு 2010 பிப்ரவரி 14 அன்று தேர்வுகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை வரும் 26ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவுகளின் பெயர் மற்றும் காலி இடங்கள் விவரம்:

இந்திய ராணுவ அகடமி-டேராடூன்: 250 இடங்கள் (ஜனவரி 2011ல் வகுப்புகள் துவங்கும்)

தகுதிகள்: 1987 ஜனவரி 2ஆம் தேதிக்குப் பின்னர் மற்றும் 1992 ஜனவரி 1ஆம் தேதிக்குப் முன்னர் பிறந்த திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

இந்திய நேவல் அகடமி- எழிமலா: 40 இடங்கள ்

தகுதிகள்: 1989 ஜனவரி 2க்குப் பின்னர் மற்றும் 1992-க்கு முன்னர் பிறந்த திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பிஎஸ்சி(இயற்பியல் மற்றும் கணிதம்) அல்லது பிஈ (பொறியியல்) படித்திருக்க வேண்டும்.

விமானப்படை அகடமி- ஹைதராபாத்: 32 இடங்கள ்

தகுதிகள்: 1988 ஜனவரி 2க்குப் பின்னர் மற்றும் 1992 ஜனவரி 1க்கு முன்னர் பிறந்த திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு(+2 அளவில் இயற்பியல் மற்றும் கணிதம் பயின்றிருக்க வேண்டும்) அல்லது பிஈ படித்திருக்க வேண்டும்.

ஆபீஸர் பயிற்சி அகடமி-சென்னை: 175 இடங்கள் (2011 ஏப்ரலில் வகுப்புகள் துவங்கும்)

தகுதிகள்: 1986 ஜனவரி 2-க்கு பின்னர் மற்றும் 1992 ஜனவரி 1-க்குப் முன்னர் பிறந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தேர்வின் போது அனைத்து கல்வித் தகுதிகளையும் பூர்த்தி செய்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பொதுவான விண்ணப்ப படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை ரூ.20 செலுத்தி நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட தலைமை தபால் நிலையங்களில் பெறலாம்.

ஒரு தேர்வுக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விண்ணப்பத்துடன் மத்தியத் தேர்வாணைய கட்டண ஸ்டாம்ப் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அஞ்சலக ஸ்டாம்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பங்களை “Secretary, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi-110069 ” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மற்றும் கூரியர் தபால் மூலமாகவோ அக்டோபர் 26ஆம் தேதிக்கு முன்னதாக அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-23385271 அல்லது 011-23381125 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments