Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விளம்பரத்துறையில் உள்ள வேலைவாய்ப்பு!

விளம்பரத்துறையில் உள்ள வேலைவாய்ப்பு!
, புதன், 1 அக்டோபர் 2008 (15:41 IST)
தொழில், வர்த்தகம் உள்ளிட்ட எந்தவொரு துறையின் வெற்றிக்கும் பெரும் உந்து சக்தியாக இருப்பது விளம்பரம். இன்று எந்தவொரு துறையையும் விட்டு வைக்காமல் எங்கும் பரந்து விரிந்து, தனது ஆதிக்கத்தை அது நிலை நாட்டியுள்ளது. அத்தகைய விளம்பரத்துறையில் விசாலமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அதைப்பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

வர்த்தக் நிறுவனங்களோ அல்லது மற்ற துறைகளோ தங்களின் உற்பத்தி, சேவைகளை மக்கள் மத்தியில் பிரபலமாக்க வேண்டுமென்றால், அதற்கு விளம்பரம் மிகவும் அவசியம். தங்கள் வணிகத்தை வெற்றிகரமாக மக்கள் இடையே சந்தைப்படுத்துவதற்கு விளம்பரம் ஒரு கருவியாக உள்ளது. விளம்பரம் இல்லை என்றால் வணிகம் இல்லை என்பதே உண்மை.

என்னென்ன வாய்ப்புகள்?: போட்டி நிறைந்த இன்றைய உலகில் வேலை தேடுவோருக்கும், பணம் ஈட்ட விரும்புவோருக்கும் நல்ல பல வாய்ப்புகளை விளம்பரத்துறை தருகிறது.

சிந்திக்கத் தூண்டுகிற, கவர்ந்திழுக்கும் கருத்துக்களுடன் விளம்பரங்களை உருவாக்குதல், விளம்பரப் படங்களில் நடிப்பது, விளம்பரப் படப்பிடிப்பை நடத்துவது, ஊடகங்களில் அவற்றை சேர்ப்பிப்பது, புகைப்படம் எடுப்பது, ஒளிப்பதிவு செய்வது, ஒரு நிறுவனத் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் வகையில் கண்காட்சி உள்ளிட்டவற்றை நடத்துவது, வாடிக்கையாளர்கள் தொடர்பை ஏற்படுத்தித் தருவது, விற்பனை மேலாளர் பணி, விற்பனை பிரதிநிதிகள் பணி என ஏராளமான வேலைவாய்ப்புகள் இத்துறையில் கொட்டிக் கிடக்கின்றன.

விளம்பர முகமைகளை அமைத்து அதை திறம்பட நிர்வகித்தால் நல்ல வருவாய் பெறலாம். தொழில் நிறுவனங்களுக்கு விளம்பரங்களை அமைத்துத் தருதல், அவற்றை வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை போன்ற ஊடகங்களில் வெளியிடுதல் ஆகியவை இதில் அடங்கும்.

தேவையான தகுதிகள்: நல்ல கற்பனைத் திறனுடன், புதுமையான கோணத்தில் எதையும் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் தான் இத்துறைக்கு மிகவும் தேவைப்படுகிறார்கள். இத்துறையில் குறைந்த பட்சம் விளம்பரம் தொடர்பான பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துறை தொடர்பான அறிவுடன், ஆங்கிலப் புலமையும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

விளம்பரத்துறை தொடர்புடைய பாடங்கள்: நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் விளம்பரத்துறை தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இளங்களை, முதுநிலை, பட்டயப் பட்டப் படிப்புகளாக இவை நடத்தப்படுகின்றன.

கற்பனைத் திறனை மேம்படுத்துதல், விளம்பரக் கருத்தை சென்றடையச் செய்தல், சந்தைப் படுத்துதல், நிதியாதாரம், திட்டமிடல் உள்ளிட்டவை இதில் போதிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை எத்திராஜ் கல்லூரி, கிறிஸ்டியன் கல்லூரி, திருவெண்காடு விவேகானந்தா கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி உள்ளிட்ட குறிப்பிட்ட சில கல்லூரிகளில் விளம்பரத்துறை தொடர்பான பாடங்கள் நடத்தப்படுகின்றன.

வேலைவாய்ப்பு: விளம்பரத் துறையில் பட்டம் பெற்றவர்கள் தொடக்கத்திலேயே அவர்களின் திறமைக்கேற்ப மாதம் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை சம்பாதிக்கலாம். இத்துடன் எம்.பி.ஏ. உள்ளிட்ட கூடுதல் கல்வித் தகுதியைப் பெற்றிருப்பின் ரூ. 15,000 முதல் 22,000 வருவாய் ஈட்ட முடியும்.

இத்துறையில் நல்ல நிபுணத்துவமும், அனுவபத்தையும் பெற்றால், விளம்பர முகமைகள் நடத்தி மாதம் ரூ. 30,000 முதல் 50,000 வரை வருவாயைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

விளம்பரம் இல்லை என்றால் எதுவுமே இல்லை என்பது தான் இன்றையை உலகில் நிதர்சன உண்மை. எனவே இத்துறையில் துணித்து கால் பதித்தால் வெற்றி நிச்சயம் என்பது உறுதி.

Share this Story:

Follow Webdunia tamil