Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய காவல்படையில் 2,153 எஸ்.ஐ. பணியிடங்கள்

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2009 (13:52 IST)
மத்திய காவல்படையில் உள்ள 2,153 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக மத்திய அரசு ஊழியர் தேர்வாணையத்தின் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

சி.ஆர்.பி.எஃப் ( CRP F), சி.பி.ஐ ( CB I), எஸ்.எஸ்.பி ( SS B), சி.ஐ.எஸ்.எஃப் ( CIS F), பி.எஸ்.எஃப் மற்றும் ஐ.டி.பி.பி. ( ITB P) ஆகிய துணை ராணுவப் பிரிவுகள் மத்திய காவல்படைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் உள்ள 2,153 எஸ்.ஐ. காலியிடங்கள் எஸ்.எஸ்.சி. ( Staff Selection Commission - SSC) தேர்வு மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

காலியிடங்கள் எண்ணிக்கை: சி.ஆர்.பி.எஃப்-352, பி.எஸ்.எஃப்-268, சி.ஐ.எஸ்.எஃப்-1,500, எஸ்.எஸ்.பி-11 என மொத்தம் 2,153 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 26.06.2009 அன்று 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு உச்ச வயது வரம்பில் 5 ஆண்டு தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு விவரம்: மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு (100 மதிப்பெண்) நடத்தப்படும். அகில இந்திய அளவில் செப்டம்பர் 6ஆம் தேதி இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.100ஐ கட்டணமாக (சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஃபீஸ் ஸ்டாம்ப்) ஆக செலுத்த வேண்டும். தலைமைத் தபால் நிலையங்கள் இதற்கான ஸ்டாம்ப்களைப் பெறலாம். தேர்வு பற்றிய முழு விவரங்கள், விண்ணப்பப் படிவங்களை ssc.nic.i n என்ற இணையதளத்தில் இலவசமாக பெறலாம்.

கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Regional Director (SR), SSC, E.V.K. Sampath College Road, Chennai-600006 வரும் 26ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments