Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தி.நகரில் இலவச ஆங்கிலப் பயிற்சி

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2009 (16:46 IST)
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள், பெண்களுக்கு சென்னை தி.நகரில் உள்ள ஸ்டெனோகிராபர்ஸ் கில்டு இலவச ஆங்கில பேச்சுப் பயிற்சி வழங்குகிறது.

இதுதொடர்பாக ஸ்டெனோகிராபர்ஸ் கில்டு தலைவர் எஸ்.வி.ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற பெண்கள், அநாதைகள், சேரியில் குடியிருப்போர், திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர், நாடோடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வரும் 18ஆம் தேதி துவங்கும் இந்த பயிற்சி வகுப்பு 75 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். 30 வயதிற்கு உட்பட்ட, குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு நிறைவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் சேர முடியும்.

இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் வயதுச் சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழுடன் வரும் 16ஆம் தேதிக்குள், “தி ஸ்டெனோகிராபர்ஸ் கில்டு, எண்: 1, கில்டு தெரு (சிவா-விஷ்ணு கோயில் பின்புறம்) தி.நகர், சென்ன ை ” என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 24342421 அல்லது 24337387 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments