Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிள‌ஸ் 2 முடித்த பெண்களுக்கு நோக்கியாவில் வேலைவா‌ய்ப்பு

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2009 (13:09 IST)
உலகப் புகழ்பெற்ற செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவுக்கு ஆயிரம் பெண்களை ஆப்ரேட்டர் டிரெ‌ய்னியாக தேர்வு செ‌ய்யும் சிறப்பு வேலைவா‌ய்ப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரு‌ம் 7ஆ‌ம் தேதி நடைபெறுகிறது.

இம்முகாமில் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு மாத ஊதியம் ரூ.4400 மற்றும் இலவச உணவுடன் ஆ‌யிர‌ம் ரூபா‌ய்‌க்கான உணவுப்பட ி, இலவச மருத்துவ வசத ி, 60 கி.மீ சுற்றளவிற்கு இலவச போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.

‌ பிள‌ஸ் 2 பொதுத் தேர்வில் 60% மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் படிப்பு சான்றித‌ழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வரும் 7ஆம் தே‌தி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ள முகாமில் தேர்வு செ‌ய்யப்படும் பெண்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும் என வேலைவா‌ய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments