Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: SC, ST வகுப்பினருக்கு கட்டண சலுகை

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (16:38 IST)
தமிழக குற ு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலையம் சார்பில் இளைஞர்களுக்கு தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

சென்னை கிண்டியின் ஜி.எஸ்.டி.சாலையில் உள்ள குற ு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலையத்தில் வரும் 7ஆம் தேதி துவங்கும் இப்பயிற்சி வகுப்பு 16ஆம் தேதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நவீன ‘டச்-ஆசிட ்’ முறையில் பயிற்சி வழங்கப்படும் என்றும், பயிற்சி முடித்தவர்களுக்கு இந்திய அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்பயிற்சி முடித்தவர்கள் சுயதொழிலாக நகை அடகுக் கடை மற்றும் தங்க நகை வியாபாரம் செய்யவும ், நாட்டுடமை வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு பெறவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சிக்கான கட்டணம் ரூ.3,500. தாழ்த்தப்பட் ட, பழங்குடியின வகுப்பினருக்கும், ஊனமுற்றவர்களுக்கும் பயிற்சி கட்டணத்தில் 50% சலுகை வழங்கப்படும். இதுதொடர்பாக மேலும் தகவல் வேண்டுவோர், 044-22500765, 22501011 என்ற தொலைபேசி எண் அல்லது 99623-62993, 99446-49469 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments