Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ISRO-வில் பணிவாய்ப்பு

டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ISRO-வில் பணிவாய்ப்பு
, திங்கள், 13 ஜூலை 2009 (17:04 IST)
திருவனந்தபுரத்தில் உள்ள வலியமாலா என்ற இடத்தில் மத்திய அரசு விண்வெளித் துறையின் (ISRO) கீழ் இயங்கும் நிறுவனமான திரவ எரிபொருள் நிலையம் (Liquid Propulsion Systems Center) செயல்படுகிறது. ராக்கெடஎரிபொருள் குறித்த முக்கிய ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் இங்கு நடைபெறுகிறது. இந்த நிலையத்தில் பணியாற்ற டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல்) பதவிக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பதவிக்கு எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ருமென்டேஷன் உள்ளிட்ட என்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதேபோல் டெக்னீசியன்-ஏ (பிட்டர்), டெக்னீசியன்-ஏ (வெல்டர்), டெக்னீசியன்-ஏ (எலக்ட்ரானிக் மெக்கானிக்), டெக்னீசியன்-ஏ (டர்னர்) ஆகிய பணிகளுக்கு, எஸ்.எஸ்.எல்.சி. படிப்பில் தேர்ச்சி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படிப்பில் தேர்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20/07/2009 தேதிப்படி 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

இதற்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமே அனுப்ப வேண்டும். lpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்-லைன் மூலம் வரும் 20/07/2009 மதியம் ஒரு மணி வரை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil