Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரயில்வேயில் 2.27 இலட்சம் பணி வாய்ப்புகள்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2010 (20:35 IST)
FILE
இந்திய இரயில்வேயில் 2.27 இலட்சம் பணி இடங்கள் உள்ளதெனவும், அவற்றை நிரப்ப அடுத்த 2,3 மாதங்களில் அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் இரயி்ல்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கிரிஸ்நகர் எனுமிடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மம்தா பானர்ஜி, நிரப்பப்படாத பணி இடங்கள் மட்டும் 1.67 இலட்சம் உள்ளதெனவும், இது தவிர ஓய்வு பெற்றவர்களின் பணியிடங்கள் 60 ஆயிரம் உள்ளதெனவும் கூறியுள்ளார்.

“இவை யாவும் முழுமையாக நிரப்பப்படும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும ்” என்று கூறியுள்ள அமைச்சர் மம்தா பானர்ஜி, தங்களது தாய் மொழியில் இரயி்ல்வே பணி வாரிய தேர்வில் எழுதலாம் என்றும், கட்சி நிறத்தை பார்த்து யாருக்கும் வேலையளிக்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார்.

இரயில்வேயில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளதால், இராணுவ முன்னாள் வீரர்களைக் கொண்டு 16,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் மம்தா கூறியுள்ளார்.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments