Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் தேர்வு: ஜூலை 6 கடைசிநாள்

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2009 (12:26 IST)
இந்தியன் எக்னாமிக் சர்வீஸ், இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் சர்வீஸ் ஆகியவற்றில் கிரேட்-4 பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரவேற்றுள்ளது.

வயது தகுதி: இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜனவரி 1, 2009 அன்று 21 வயதிற்கு மேல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி: இதில் இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் ( Indian Economic Servic e- IES) தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், எக்னாமிக்ஸ், அப்ளைட் எக்னாமிக்ஸ், பிசினஸ் எக்னாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதேபோல் இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் சர்வீஸ் ( Indian Statistical Servic e- ISS) தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஸ்டாடிஸ்டிக்ஸ், மேத்தமெட்டிக்கல் ஸ்டாடிஸ்டிக்ஸ், அப்ளைட் ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை தலைமை தபால் அலுவலகங்கள், இதர தபால் அலுவலகங்களில் ரூ.20 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இத்தேர்வுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஃபீ ஸ்டாம்ப் ஆக அனுப்ப வேண்டும். எஸ்.சி/எஸ்.டி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கடைசி தேதி: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை Secretary, Union Public Service commission, Dholpur house, Shahjahan Road, New Delhi - 110069 என்ற முகவரிக்கு ஜூலை 6ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். upsc.gov.in என்ற இணையதளத்திலும் இதுபற்றி மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments