Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவூதியில் சிறப்பு மருத்துவர்கள் தேவை: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (21:14 IST)
சவூதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு அனைத்து துறையிலிருந்தும் கன்சல்டன்ட்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


 
 
இது தொடர்பாக தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
 
சவூதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 50 வயதிற்குட்பட்ட கன்சல்டன்ட்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் பணிபுரிய தேவைப்படுகிறார்கள்.
 
தேர்ந்தெடுக்கப்படும் கன்சல்டன்ட் மருத்துவர்களுக்கு ரூ.4,25,000 முதல் ரூ.5,10,000 வரையிலும், சிறப்பு மருத்துவர்களுக்கு ரூ.2,89,000 முதல் ரூ.3,91,000 வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
 
மேலும், இலவச விமான டிக்கெட், குடும்ப விசா, இருப்பிடம் மற்றும் சவூதி அரேபிய அரசின் சட்ட திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.
 
எனவே, விருப்பமுள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
மேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் மற்றும் omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்வதில் சிக்கலா?

எப்போதும் குற்றவாளிகளையே காப்பாற்ற திமுக முயல்வது ஏன்? - அண்ணாமலை பரபரப்பு பதிவு!

திபெத்தில் பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு.. எவரெஸ்ட் சிகரம் ஏற தடை..!

அண்ணா பல்கலை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஏற்று கொண்ட சபாநாயகர்..!

மாணவி வன்கொடுமை சம்பவத்தில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்! - த.வா.க வேல்முருகன்!

Show comments