Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ராணுவ கல்வி படைப்பிரிவில் வேலை

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (20:03 IST)
இந்திய ராணுவ கல்வி படைப்பிரிவில் 123-வது Army Education Corps பிரிவுக்கான பயிற்சி 2016 ஜூலை மாதம் ஆரம்பமாக உள்ளது. இப்பிரிவில் சேர திருமணமான, திருமணமாகாத முதுகலை பட்டம் பெற்ற இந்திய ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணிப்பிரிவு: Army Education Corps (AEC-123) (July 2016)
 
சம்பளம்: ஒரு வருட பயிற்சிக்கு பின்பு நிரந்தர பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15,600 + தர ஊதியம் ரூ.5,600 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
 
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 23 - 27க்குள் இருக்க வேண்டும்.
 
தகுதி: ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், தத்துவ இயல்,  உளவியல், சமூகவியல், பொது நிர்வாகம், சர்வதேச உறவுகள், சர்வதேச கல்வி போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், இயற்பியல், தாவரவியல், ஜியாலஜி, எலக்ட்ரானிக்ஸ் துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
அல்லது மொழிபடங்களான Chinese, Tibetan, Burmese, Pushto, Dari & Arabic மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
தேர்வு செய்யப்படும் முறை: முதுகலை பட்டத்தில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் Service Selection Board தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்படும்.
 
தேர்வு நடைபெறும் நகரங்கள்: அலகாபாத், போபால், பெங்களூர்.
 
நேர்முகத் தேர்வு:  2016 ஜனவரி மாதம் முதல் நடைபெறும்.
 
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை இரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொண்டு நேர்முகத் தேர்விற்கு வரும்போது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட்டு தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்றது  அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2015
 
இந்த பணிக்கான முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments