Webdunia - Bharat's app for daily news and videos

Install App

H-1B விசா கட்டுப்பாடுகள் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தாது: வெள்ளை மாளிகை!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2009 (14:26 IST)
அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்கள் பணி வாய்ப்பு பெறுவதற்கான H-1B விசா மீது தற்பொழுது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இந்தியர்களின் பணி வாய்ப்புகள் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்திய தொழில் கூட்டமைப்பின் ( Confederation of Indian Industries - CII) தலைவர் சுனில் பாரதி மிட்டல் தலைமையில் சென்ற சிஇஓ குழுவினரை வெள்ளை மாளிகையில் சந்தித்த அமெரிக்க அரசின் தேச பொருளாதார பேரவையின் இயக்குனர் லாரன்ஸ் சம்மர்ஸ், அமெரிக்காவில் நிலவுவரும் வேலையின்மை பிரச்சனை மேலும் அதிகமானால் மட்டுமே இந்தியர்களின் பணி வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்றும், தற்பொழுதுள்ள சூழ்நிலையில் அப்படிப்பட்ட பாதிப்பிற்கு வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

H-1B விசா மட்டுமின்றி, அமெரிக்க நிறுவனங்களுக்கு ஊக்க நிதி உதவி செய்யும் அமெரிக்க அரசின் திட்டத்தின் கீழும் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள், இந்தியர்களின் பணி வாய்ப்பை பாதிக்கக்கூடியவை என்று கூறி, அது தொடர்பாக விளக்கம் பெற லாரன்ஸ் சம்மர்ஸை இந்திய தொழில் கூட்டமைப்புக் குழு சந்தித்தது.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுனில் மிட்டல், “H-1B விசா கட்டுப்பாடுகளினால் இந்தியர்களுக்கு கிடைக்கக்கூடிய பணி வாய்ப்புகளில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அமெரிக்காவின் வேலையின்மை நிலை கடுமையாக மோசமடைந்தால் மட்டுமே அப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அரசின் நிலைப்பாடு நமக்கு சாதகமாகவே உள்ளது. அவர்களுடைய கொள்கை இன்னமும் திறந்ததாகவே உள்ளதென நினைக்கிறேன ் ” என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கடுமையாக பாதித்துள்ள பொருளாதார பின்னடைவு அந்நாட்டில் எந்த அளவிற்கு வேலையின்மையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து தங்களுடைய சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments