Webdunia - Bharat's app for daily news and videos

Install App

772 வி.ஏ.ஓ.க்களுக்கு பணி நியமன ஆணை

Webdunia
வியாழன், 19 பிப்ரவரி 2009 (12:25 IST)
சிறப்பு தேர்வு மூலம் தேர்வு செய்யப் பட்ட 772 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (வி.ஏ.ஓ.) பணி நியமன ஆணைகளை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

1980- க்கு முன்னர் கிராம முன் சீப், ஹெட்மேன், கிராம கர்ணம் போன்ற பதவிகளுக்கு கோட்டாட்சியர்களால் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் பணிக்காக காத்திருந்த நேரத்தில், அந்தப் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டன.

இவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்க 7-9-2008 மற்றும் 5-10-2008 தேதிகளில் 6 மையங்களில் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. அதில் 792 பேர் வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களில் 772 பேருக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நே‌ற்று அமைச்சர் மு.க. ஸ்டாலின் ப‌ணி ‌நியமன ஆணைகளை வழங்கினார்.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments