Webdunia - Bharat's app for daily news and videos

Install App

+2 மாணவ‌ர்களு‌க்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ‌சிற‌ப்பு முகா‌ம்

Webdunia
புதன், 20 மே 2009 (11:47 IST)
+2 மாணவ‌ர்க‌ள் வேலை வா‌ய்‌ப்பு அலுவலக‌த்‌தி‌ல் ப‌திவு செ‌ய்ய ‌சிற‌ப்பு முகா‌ம் நட‌த்த ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்னை மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் மைதிலி கே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், மேல் நிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

மேற்படி மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் 25-ந் தேதி அன்று அளிக்கப்பட உள்ளதால் 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நான்கு வேலைநாட்களில் திருவல்லிக்கேணி, காமராஜர் சாலையில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி (விவேகானந்தர் இல்லம் அருகில்) மற்றும் தங்கசாலை அரசு தொழில்பயிற்சி நிலையம் ஆகிய 2 மையங்களில் வேலைவாய்ப்பு பதிவிற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இம்முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பதிவுக்கு வரும் மாணவ, மாணவியர்கள் அனைத்து கல்விச்சான்றிதழ், குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் ஆகியவை கொண்டு வருதல் வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments