ஈஷாவின் சமூகநலத் திட்டங்கள்
இன்று நீங்கள் எந்த கிராமத்தில் நுழைந்தாலும் 60 சதவீத மக்கள் உடலளவில் முழு வளர்ச்சியற்றவர்களாக இருப்பதை பார்க்க முடியும். இது ஒரு அமைதியான, ஆனால் மிகப் பெரியபேரழிவு. உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால், இந்தமக்கள் இந்த நாட்டிற்கும் இந்த உலகிற்கும் மிகப் பெரும் சொத்தாக இருப்பார்கள். ஆரோக்கியம்,கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை மக்களின் நலனுக்கு மிகவும் அடிப்படையானவை.- சத்குர ு
இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் முக்கிய வளமாக திகழும் மக்களை உற்சாகமான, திறமையான, தங்கள் வாழ்வை தங்கள் கையில் எடுத்து செயல்படும் உறுதிமிக்க மனிதர்களாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, கிராமமக்களை உய்விக்கும் வகையில் கிராம புத்துணர்வு இயக்கம், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக பசுமைக்கரங்கள் திட்டம், தரமான நவீன கல்வியை வழங்க ஈஷா வித்யா போன்ற சமூகநலத் திட்டங்கள் தொடங்கப்பட்டன.