Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைவா‌ய்‌ப்பு‌த்துறை இணையதள‌ம் புது‌ப்‌பி‌க்க‌ப்பட‌வி‌ல்லை

Webdunia
புதன், 4 மார்ச் 2009 (11:23 IST)
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதளம் கடந்த 3 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் தற்போதைய பதிவுமூப்பு நிலையை அறிய முடியாமல் உ‌‌ள்ள‌ன‌ர் ப‌திவுதார‌ர்க‌ள்.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதி வாரியாக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) பட்டியலை எல்லோரும் தெரிந்துகொள்வதற்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளம் ( www.employment.tn.gov.in) செயல்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர் எ‌ளிதாக சேவைகள‌ை‌ப் பெறு‌ம் வகை‌யி‌ல் துவ‌‌க்க‌ப்ப‌ட்ட இ‌ந்த இணையதள‌ம், கட‌ந்த 3 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம் மேலாக ப‌திவு செ‌ய்ய‌ப்படாம‌ல் உ‌ள்ளது.

ப‌திவுதார‌ர்‌க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை, ப‌திவுமூ‌ப்பு உ‌ட்பட அனை‌த்து‌ம் பழையதாக உ‌ள்ளதா‌ல் நட‌ப்பு ‌விவர‌ங்களை அ‌றி‌ந்து கொ‌ள்ள இயலாம‌ல் உ‌ள்ளது.

இதேபோல், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் தகவல்களும் 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் புதுப்பிக்கப்படவில்லை. எனவே, உடனடியாக அனைத்து தகவல்களையும் புதுப்பித்து தற்போதை புள்ளிவிவரங்களையும், பதிவுமூப்பு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று வேலை வா‌ய்‌ப்பு அலுவலக‌ங்க‌ளி‌ல் ப‌திவு செ‌ய்து வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள் எதிர்பார்க்கிறார்கள்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments