Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டினர் வெளியேற வேண்டும்

Webdunia
புதன், 18 மார்ச் 2009 (12:31 IST)
வேலை இ‌ல்லாம‌ல் த‌ங்க‌ள் நா‌ட்டி‌ல் த‌ங்‌கியு‌ள்ள வெ‌ளிநா‌ட்டி‌ல் வெ‌ளியேற வே‌ண்டு‌ம் எ‌ன்று ஐரோ‌ப்‌பிய நா‌ட்டு ம‌க்க‌ள் கரு‌த்து‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகியவற்றில் வெளிநாட்டினர் குடியேறி வேலை செய்து வருகிறார்கள்.

இப்படி குடியேறியவர்களில் பலருக்கு பொருளாதார பின்னடைவு காரணமாக வேலை இல்லை. இப்படி வேலை இல்லாமல் இருப்பவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என்று அந்த நாட்டு மக்கள் தெரிவித்து உள்ளனர்.

79 ‌ விழு‌க்கா‌ட்ட ு இத்தாலியர்களும், 78 ‌விழு‌க்கா‌ட்டு இங்கிலாந்து நாட்டினரும், 71 ‌விழு‌க்கா‌ட்டு ஸ்பெயின் நாட்டினரும், 67 ‌விழு‌க்கா‌ட்டு ஜெர்மானியர்களும், 51 ‌விழு‌க்கா‌ட்டு பிரஞ்சு மக்களும் இப்படி கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இதற்கிடையில் இங்கிலாந்து நாட்டு வேலைகள் இங்கிலாந்து மக்களுக்கே என்ற முழக்கத்துடன் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் செயல்பட்டு வருகிறார்.

அந்த நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் 20 லட்சம் ஆக இருக்கிறது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத உச்சம் ஆகும்.

ஸ்பெயினில் மட்டும் கடந்த 10ஆண்டுகளில் வடக்கு ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா ஆகிய இடங்களில் இருந்து 50 லட்சம் பேர் குடியேறி உள்ளனர். அங்கும் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதால், வெளிநாட்டினர் தங்கள் தாய் நாடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments