Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரிவுரையாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி!

விரிவுரையாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி!
, திங்கள், 6 அக்டோபர் 2008 (17:44 IST)
பல்கலைக்கழக மானியக்குழு விரிவுரையாளர் பயிற்சி நிறுவனம் சார்பில் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நவம்பர் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

சென்னை பல்கலைக்கழக யு.ஜி.சி. விரிவுரையாளர் பயிற்சி நிறுவனம் நடத்தும் இப்பயிற்சியில், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகள் மட்டுமின்றி பிற தனியார் கல்லூரி விரிவுரையாளர்களும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ் விரிவுரையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நவம்பர் 24 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய விரும்புவோர் 044 - 25399469, 25399505 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil