Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசா மோசடிக்கு உள்ளான மாணவர்களுக்கு யு.எஸ். அளிக்கும் மூன்று வழிகள்

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2011 (11:32 IST)
கலிஃபோர்னியாவிலுள்ள டிரை-வாலி பல்கலையில் படித்துக்கொண்டிருந்து, விசா மோசடி கண்டுபிடிக்கப்ட்டதனால் தறபோது என்ன செய்தென்றறியாமல் உள்ள இந்திய மாணவர்களுக்கு மூன்று வழிகளை அமெரிக்க அரசு அளித்துள்ளது.

ஒன்று, அமெரிக்க குடியேற்றத் துறையின் மூலம் நாட்டிற்குத் திரும்புவது, இரண்டு, அவர்களாகவே உடனடியாக நாடு திரும்புவது, மூன்றாவது, அமெரிக்காவில் தங்கி படிப்பதற்கான அனுமதியை பெற மறு விண்ணப்பம் செய்வது ஆகிய மூன்று வழிகளை அந்நாட்டு குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை வழங்கியுள்ளது.

விசா மோசடிக்கு ஆளாகி, காலில் கண்காணிப்பு டிராக்கர் கட்டப்பட்ட மாணவர்கள் 18 பேரில் சிலரின் கால்களில் இருந்து டிராக்கர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய மாணவர்களுக்கு உதவ தெற்காசிய வழக்குரைஞர்கள் சங்கத்தின் மூலம் சட்ட உதவியை சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சட்ட உதவியால் இந்திய மாணவர்கள் மீண்டும் அங்கு தங்கிப் படிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்படுகின்றன.

கலிஃபோர்னியாவிலேயே தங்கிப் படிக்க வேண்டுமெனில், அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் அன்றாடம் வகுப்புக்களுக்குச் சென்று படித்தத்த்றகான அத்தாட்சியையும், பாடத்தில் அதற்கேற்ற முன்னேற்றத்தையும் காட்டி நிரூபிக்க வேண்டும். ஆனால் டிரை-வாலியில் படித்த பல இந்திய மாணவர்கள் அன்றாடம் கல்வி சாலை சென்று படித்தவர்கள் இல்லை. எனவே அவர்களில் பலரின் நிலை கேள்விக்குறியதாகியுள்ளது.

இந்த நிலையில் நாடு திரும்புவதா அல்லது எதாவது ஒரு வழியில் மறு வாய்ப்பைப் பெற்று தொடர்ந்து படிப்பதா என்று மாணவர்கள் ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க அரசின் மாணவர்கள் மற்றும் வருகையாளர்கள் பரிமாற்றத் திட்டத்தின் ( Students and Exchange visitors Programme - SEVP) கீழ் தங்களுக்குள்ள வாய்ப்பு குறித்து அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை இணையத் தளத்தில் விவரங்களை பதித்துள்ளது.

டிரை-வாலியில் படித்த மாணவர்களை வேறு எந்த பல்கலையாவது சேர்த்துக்கொண்டால், அந்த மாணவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பெற்று எஃப்-1 படிவத்தில் பதிவு செய்யுமாறு குடியேற்றத் துறை உத்தரவிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments