Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு த‌ள்‌‌ளிவைப்பு!

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (17:26 IST)
தஞ்சாவூரில் நடைபெற இருந்த, ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு மழை காரணமாக வருகிற 14 ஆ‌ம் தேதிக்கு த‌‌ள்‌ளி வைக்கப்பட்டுள்ளது.

இது தொட‌ர்பாக விருதுநகர் மாவட்ட முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் கதீஜா பேகம் தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், " இந்திய ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு தஞ்சாவூரில் கடந்த நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 ஆம தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் மழை காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் படி வருகிற 14 ஆ‌ம் தேதி முதல் 19 ஆ‌ம் தேதி வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு திடலில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

சோல்ஜர் டெக்னிக்கல ், நர்சிங் அசிஸ்டென்ட் பதவிக்கு வயது 17 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சியுடன் 50 ‌ விழு‌க்காடு மதிப்பெண் இருத்தல் வேண்டும். சோல்ஜர் ஜெனரல் பதவிக்கு வயது 17 முதல் 21-க்குள்ளும், கல்வித்தகுதி 10 ஆ‌ம் வகுப்பு தேர்ச்சியில் 45 ‌ விழு‌க்காடு மதிப்பெண் இருத்தல் வேண்டும்.

சோல்ஜர் டிரேட்ஸ்மேன் பதவிக்கு வயது 17 முதல் 23-க்குள் இருத்தல் வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி பெ‌ற்‌ற ிருத்தல் வேண்டும். சோல்ஜர் கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பதவிக்கு வயது 17 முதல் 23-க்குள்ளும், கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சியில் 50 ‌ விழு‌க்காடு மதிப்பெண் இருத்தல் வேண்டும ்.

உடனடியாக வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், விருப்பமும் கொண்ட இளைஞர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்கள் பெற ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம ்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments