Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவம், பொறியியல்: மே 4 முதல் விண்ணப்பம்

Webdunia
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு வரு‌ம் மே மாத‌ம் 4ஆ‌ம் தே‌தி முதல் விண்ணப்பங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

+2 தேர்வுகள் நேற்று முட ிவடை‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌ன்னு‌ம் 10 நா‌ட்களு‌க்கு ‌விடை‌த்தா‌ள் ‌திரு‌த்து‌ம் ப‌ணிக‌ள் துவ‌ங்க உ‌ள்ளன. ‌‌விடை‌த்தா‌ள்க‌ள் ‌திரு‌த்து‌ம் ப‌ணிக‌ள் துவ‌ங்‌கி வரு‌ம் ம ே மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும் எ‌ன்று தெ‌ரி‌கிறது.

இ‌ந்த நிலையில், மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேர, ஒன்றரை லட்சம் மாணவர்கள் அரசு அறிவிப்பை எதிர்பார்த்து ஆவலாய் உள்ளனர்.

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் 2009 - 10ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மே 4ம் தேதி முதல் விநியோகம் செய்ய மருத்துவக் கல்வி இயக்குனரகமும், அண்ணா பல்கலைக்கழகமும் திட்டமிட்டுள்ளன.

மருத்துவப் படிப்புக்கு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விநியோகம் செய்யப்படும். பொறியியல் படிப்புக்கு முதல் கட்டமாக ஒரு லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கல்வி, மருத்துவம் போன்றவற்றில் தேர்தல் ஆணையத்தின் தலையீடு இருக்காது. அதனால், +2 தேர்வு முடிவுகளும் சரியான நேரத்தில் வெளியாகும். விண்ணப்பங்களை திட்டமிட்டபடி விநியோகம் செய்வதில் தாமதமாக வாய்ப்பில்ல ை என்றார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments