Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதநேய மாணவர்கள் 315 பேர் தேர்ச்சி!

Webdunia
புதன், 12 ஜனவரி 2011 (20:41 IST)
சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் கல்வியகத்தில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர் 315 பேர் தமிழக அரசின் தேர்வாணையம் நடத்திய குரூப் -2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட மாநகராட்சி ஆணையர், சார் பதிவாளர், உதவி பிரிவு அலுவலர் போன்ற அரசுப் பொறுப்புகள் ஆகியவற்றிற்கான குரூப் -2 தேர்வு முடிவுகளில் செவவாய்க் கிழமை வெளியிடப்பட்டது. இதில் மனிதநேய கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 130 மாணவிகளும், 185 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற இவர்களில் மாற்றுத் திறனாளிகள் 10 பேரும் உள்ளனர்.

2007 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தமிழக அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் -1, குரூப் -2 தேர்வுகளில் இம்மையத்தில் பயிற்சி பெற்ற 595 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 22, 23ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள குரூப் -1 எழுத்துத் தேர்விற்கு 690 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சியகத்தில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் 14.01.2011 முதல் 9176252070, 9176254010, 24358373 ஆகிய கைபேசி, தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரமறியலாம் என்று இம்மையத்தின் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments