Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு 'ஏ' கிரேடு : தேசிய தர மதிப்பீட்டு‌க் குழு வழங்கியது

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
புதன், 1 ஜூலை 2009 (19:44 IST)
ஈரோடு : சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரிக்கு "ஏ' கிரேடு ‌நிலைய ை தேசிய தர மதிப்பீட்டு குழு வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அத்தாணி சாலை‌யி‌ல ் உள்ளது பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி. இந்த க‌ ல்லூரிக்கு நம்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்து அங்கீகாரம் வழங்குவதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவினால் ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சி பெற்ற நிறுவனமான தேசிய தர மதிப்பீட்டுக் குழு வந்து இக்கல்லூரியில் உள்ள பாடத்திட்ட முறைகள், கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பீடுகள், ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் விரிவாக்க பயிற்சிகள், உள் கட்டமைப்பு, கற்றல் வசதிகள், மாணாக்கர்களுக்கு உதவி மற்றும் அதன் வழிநடத்தல், நிர்வாக திறமை மற்றும் தலைமை பொறுப்புகள் மற்றும் புதுமையான செயல்முறைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தது.
webdunia photoWD

165 ஏக்கர் பரப்பளவில் 15 லட்சத்திற்கும் மேல் சதுரடி கொண்ட கட்டிடங்கள் கொண்ட பண்ணாரி அம்மன் தொழில்நுட் ப‌ க் கல்லூரியை 'ஏ' கிரேடு ‌நிலை வழங்கியுள்ளதாக இக்கல்லூரியின் தலைவரும் பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவருமான டாக்டர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் செய்தியளார்களிடம் கூறினார்.

மேலும் அவர் கூறும்போத ு, இக்கல்லூரியை வெளிநாடுகளில் உள்ள பல்கலைகழகத்திற்கு இணையாக உயர்த்துவதே நோக்கமாகும ். கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து விளையாட்டு, யோகா, இசை மற்றும் கம்ப்யூட்டர் போன்ற பணிகள் இருப்பதால் இக்கல்லூரியில் ராக்கிங் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

கல்லூரியின் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன், முதன்மை அதிகாரி டாக்டர் ஏ.எம்.நடராஜன், முதல்வர் டாக்டர் ஏ.சண்முகம், கல்லூரி ஆட்சிமன்ற உறுப்பினர் சுப்பையா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

Show comments