Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலகர்கள் பதவி உயர்வுக்கு இடைக்கால தடை

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2009 (11:36 IST)
நூலக‌ர்க‌ள் 225 பேரு‌க்கு பத‌வி உய‌ர்வு அ‌ளி‌க்கு‌ம் அர‌சி‌ன் ப‌ட்டியலு‌க்கு செ‌ன்னை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால‌த் தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது.

சே ல‌த்தை‌ச் சே‌ர்‌ந்த முருகன், விழுப்ப ுர‌த்தை‌ச் சே‌ர்‌ந்த பரிமளா சக்திவேல் உட்பட 4 பேர், உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்த மனு ‌நே‌ற்று ‌விசாரணை‌க்கு எடு‌த்து‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டது.

அ‌ந்த மனு‌வி‌ல், நா‌ங்க‌ள் நா‌ல்வரு‌ம், கடந்த 6 ஆண்டுகளாக கிராம நூலகராக பணியாற்றுகிறோம். எங்களுக்கு 3ம் நிலை நூலகராக பதவி உயர்வு அளிக்க வேண்டும். இதற்கான பதவி உயர்வு பட்டியலை அண்மையில் அரசு தயாரித்தது. ஆனால், இதில் எங்களைவிட பத‌வி மூ‌ப்பு குறைந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், எங்களது பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, 225 பேருக்கு பதவி உயர்வு அளிக்கும் அரசின் பட்டியலுக்கும், அவர்களது நியமனத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், நூலகர்கள் 225 பேருக்கு 3ம் நிலை நூலகராக பதவி உயர்வு அளிக்க இடைக்கால தடை விதித்தார்.

மேலும், இந்த வழக்கில் 4 வாரத்துக்குள் அரசு பதில் அளிக்க தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments