Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை வெளியீடு

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2013 (10:30 IST)
6 லட்சத்து 50 ஆயிரம் பட்டதாரிகள் எழுதிய குரூப்-2 முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் ( Key Answer) வெளியிடப்பட்டுள்ளது.
FILE

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அரசுப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு வைத்து ஆட்களை தேர்ந்து எடுத்து அரசுக்கு கொடுக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. படித்த தகுதி உள்ளவர்களுக்கு குரூப்-4 தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் இளநிலை உதவியாளர் பணியிடத்தில் நியமிக்கப்படுவார்கள். பட்டப்படிப்பு தகுதி உள்ளவர்களுக்கு குருப்-2, குரூப்- 1 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

கடந்த 1 ஆம் தேதி குரூப்-2 முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு 114 நகரங்களில் 2ஆயிரத்து 269 மையங்களில் நடந்தது. மொத்தம் 5 லட்சம் பேர் எழுதினார்கள்.

தேர்வு எழுதியவர்கள் தாங்கள் எழுதிய கேள்விகளுக்கான விடைகள் சரியாக உள்ளதா எத்தனை மதிப்பெண் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் விடை தேவை. அதன்படி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை ( Key Answer) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த பதிலில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கவேண்டும். அதன்பிறகு இறுதி விடை வெளியிடப்பட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. தொடங்கியது வேட்புமனு தாக்கல்.. சுயேட்சையின் முதல் மனு..!

திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ஒரே இரவில் ஆறு முறை ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

தேர்வுக்கு பயந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12ஆம் வகுப்பு மாணவர்.. டெல்லியில் பரபரப்பு..!

சொந்த வாகனத்தில் சொந்த ஊர் செல்கிறீர்களா? ஒரு முக்கிய அறிவுறுத்தல்..!

பெண்களை தொடவே பயப்படணும்..! இன்றே கடுமையான தண்டனை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும் முதல்வர்!?

Show comments