Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வு

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2009 (11:19 IST)
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் 82 அ‌திகா‌ரிகளை தே‌ர்வு செ‌ய்வத‌ற்கான குரூப்-1 தே‌ர்வு நே‌ற்று நடைபெ‌ற்றது.

துணை மாவ‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர் உள்ளிட்ட 82 அதிகாரிகளை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப்-1 பணிகளுக்கான முதல்நிலை தேர்வில் 80 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

14 துணை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள் உள்பட 82 அதிகாரிகளு‌க்கான பத‌வி‌யிட‌ங்களு‌‌க்காக குரூப்-1 தேர்வு நடத்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சில மாதங்களுக்கு முன்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்த தேர்வில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் ஏராளமான பட்டதாரி ஆண்களும், பெண்களும் விண்ணப்பித்திருந்தனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 32 மையங்களில் 80 ஆயிரம் பேர் குரூப்-1 தேர்வில் பங்கேற்றனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் காசி விஸ்வநாதன் கூறும்போது, டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களில் இருந்து முதல் 820 பேர் தேர்வு செய்யப்பட்டு, மு‌க்‌கிய தேர்வு எழுத அழை‌க்க‌ப்படுவார்கள். அதில் பெறும் ம‌தி‌ப்பெ‌ண்க‌ளி‌ன் அடிப்படையில் 164 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடைபெறும். இதில் இருந்து 82 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு அதிகாரிகளாக பதவி ஏற்பார்கள். இனிமேல் ஒவ்வொரு ஆண்டிலும் குரூப்-2 தேர்வு நடைபெறுவதற்கு நவம்பர் மாதமும், குரூப்-1 தேர்வுகளுக்கு டிசம்பர் மாதமும் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

Show comments