Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செளதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்குப் பெண்களை அனுப்பாதீர்: இந்திய அரசிற்கு வேண்டுகோள்

Webdunia
சனி, 26 டிசம்பர் 2009 (11:50 IST)
செளதி அரேபிய நாட்டில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர், எனவே வீட்டு வேலைக்கு இந்தியப் பெண்களை அனுமதி அளிக்காதீர்கள் என்று இந்திய அரசிற்கு அங்கு பணியாற்றிய இரண்டு பெண்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சுல்தானா, ஃபாத்திமா பீவி ஆகிய இருவரும் தாங்கள் வேலை செய்த இல்லத்தில் மோசமாக நடத்தப்பட்டதாகவும், செளதியில் வந்து வீட்டு வேலை பார்த்து சம்பாதிப்பதை விட, இந்தியாவில் கல் சுமந்து சம்பாதித்து கெளரவமாக வாழலாம் என்று கூறியுள்ளனர்.

ஜெட்டாவில் இருந்து வெளிவரும் அராப் நியூஸ் என்று ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ஆயிஷா சுல்தானா, “நான் இந்திய அரசிற்கு ஒரு செய்தியை விடுக்க விரும்புகிறேன், இந்தியப் பெண்கள் யாரையும் வீட்டு வேலை செய்ய செளதிக்கு வர அனுமதிக்காதீர்கள். செளதியில் விட்டு வேலை பார்ப்பதை விட இந்தியாவில் கல் சுமந்து வாழலாம ்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு பெண்ணான ஃபாத்திமா பீவியை பணிக்கு வைத்திருந்தவன், அவரின் ஒப்புதலின்றியே வேலை வாய்ப்பு நிறுவன முதலாளிக்கு ஒருவனுக்கு மாற்றம் செய்துள்ளான். அவன் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக ஃபாத்திமா கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் செளதியிலுள்ள இந்திய தூதரகத்தில் புகார் அளித்துள்ளனர். ஆயிஷாவை வேலைக்கு வைத்தவன் அவருடைய கடவுச்சீட்டை ஒப்படைத்து நாட்டை விட்டு வெளியேற ஒப்புதல் அளித்துள்ளான்.

புதிய முதலாளியிடம் தான் பெற்ற அனுபவத்தை கூறிய ஃபாத்திமா, “எனது முதலாளியை தொடர்பு கொண்டு பேசினேன், நான் ஒரு விதவை, எனக்கு ஒரு மகள் உள்ளாள், எனவே என்னை இந்தியா திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு பதிலளித்த அந்த முதலாளி நான் அவரிடம் சென்றாலோ அல்லது என்னை எங்காவது பார்த்தாலோ அடித்து உதைப்பேன் என்று மிரட்டினார ்” என்று கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் நாடு திரும்ப ஹைதராபாத் கிரிக்கெட் லீக் உதவ முன்வந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!