Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ராணி மேரி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

Webdunia
புதன், 1 ஜூலை 2009 (18:46 IST)
சென்னை ராணி மேரி கல்லூரியில் ஜூலை 4, 5ஆம் தேதிகளில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டெக்ரூட் ( Techruit) என்ற வேலைவாய்ப்பு நிறுவனம் செய்துள்ளது.

கல்லூரிப் படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு ITES/BPO, Retail, Banking, Insurance, Finance and Sales/Marketing ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் பணியில் டெக்ரூட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

சென்னை ராணி மேரி கல்லூரியில் இந்நிறுவனம் நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 2009ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த மாணவ-மாணவியர் கலந்து கொள்ளலாம் என்று டெக்ரூட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் புருஷோத்தமன் சிவமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் Perot Systems, Country Club, Azimuth, Sutherland, Serco BPO, Reliance BPO உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளைத் தேர்வு செய்யவிருப்பதாகவும் அவர் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு அவரக்ளின் கல்வித்தகுதி, திறமைக்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலான மாதச் சம்பளம் வழங்கப்படும் என்றும், சுமார் 750க்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் சிவமணி கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments