Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுதி அரேபியாவில் பணிபுரிய டாக்டர்கள் தேவை

Webdunia
சனி, 25 ஜூலை 2009 (15:33 IST)
சவ ுதி அரேபியாவில் பணிபுரிய விருப்பமுள்ள பல்துறை சிறப்பு மருத்துவர்கள் சென்னை அடையாரில் உள்ள தமிழ்நாடு அரசு நிறுவனமான வெளிநாட்டு பணியாளர்கள் கழகத்தை தொடர்ப ுக ்கொள்ளலாம்.

இது தொடர்பாக அதன் தலைவரும், நிர்வாக இயக்குனரும் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி:

சவுதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு அதிகளவில் பல்துறை சிறப்பு மருத்துவர்களை தேர்வு செய்யவிருப்பதாக சவுதி அமைச்சக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை மருத்துவம், நரம்பியல், நீரிழிவியல், சிறுநீரியல், மகப்பேறு மருத்துவம், இதய மருத்துவம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், மூட்டு மருத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி, கண்மருத்துவம், மயக்க மருத்துவம், பல் மருத்துவம், பயோ கெமிஸ்டிரி, அவசர கால மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு மருத்துவர்களாக உள்ளவர்கள் விருப்பமும் தகுதியும் இருந்தால் உரிய ஆவணங்களுடன் 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையார், சென்னை-600 020 என்ற முகவரியில் உள்ள வெளிநாட்டு பணியாளர் கழகத்திற்கு (தமிழக அரசு நிறுவனம்) வரும் 31ம் தேதி அன்றோ, அதற்கு முன்னதாகவோ நேரில் வர வேண்டும்.

இவர்களுக்கு இம்மாதம் 26ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை புதுடெல்லியிலும், ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து 12ம் தேதி வரை பெங்களூரூவிலும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

இந்த பணிகளுக்கான வயது வரம்பு 55. குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசில் பணியாற்றும் மருத்துவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். வெளிநாட்டு பணியாளர் அலுவலகம் ஆவணங்களை சரிபார்க்கும் பணிக்காக ஜூலை 25 மற்றும் 26ம் தேதிகளில் திறந்திருக்கும்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 044-24464268, 24464269, 24467557 ஆகிய தொலைபேசி எண்களிலும், 99402 76356, 94448 72516 ஆகிய மொபைல் எண்களிலும் தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments