Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்திகிராம் ஊரகப் பல்கலையில் ஜியோ-இன்ஃபர்மேட்டிக்ஸ் படிப்பு

Webdunia
திங்கள், 22 ஜூன் 2009 (16:55 IST)
காந்திகிராம் ஊரகப் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு கால முதுநிலைப் படிப்பாக ஜியோ-இன்ஃபர்மேட்டிக்ஸ் படிப்பும், ஓராண்டு காலப் பட்டயப் படிப்பாக ஸ்பேஷியல் டெக்னாலஜி படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 2 பலதுறை சார்ந்த படிப்புகளும் டிஜிட்டல் கார்டோகிராஃபி, ரிமோட் சென்ஸிங், டிஜிட்டல் இமேஜ் பிராசஸிங், ஜி.ஐ.எஸ்., ஜி.பி.எஸ்., விஷுவல் கம்ப்யூட்டிங், ஜாவா, ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பத்திற்கான வெப் டெக்னாலஜி போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளன.

கிராம்ப்புறத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தேவையான பல்வேறு ஸ்பேஷியல் தொழில்நுட்பங்கள் குறித்தும் இந்த படிப்புகளில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதுமட்டுமின்றி, படிக்கும் காலத்திலேயே தொழில் ரீதியான பயிற்சியை மாணவர்கள் பெற, பிரபல நிறுவனங்களில் இன்டெர்ன்ஷிப் அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமி/உயிரி அறிவியல் துறையில் பட்டப்படிப்பு அல்லது பிளஸ் 2 வகுப்பில் கணிதம், புள்ளியியல், வணிகக் கணிதம் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் ஏதாவது ஒன்றைப் படித்து பின்னர் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இப்படிப்புக்கு தகுதியானவர்கள் என காந்திகிராம் ஊரகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி மேலும் விவரங்கள் அறிய:
Department of Rural Development,
Head, N.D.Mani,
Gandhigram Rural University,
Gandhigra m.
Mobile number: 9443015375.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments