Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சிக்கு ரெடியா?

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (18:26 IST)
மத்திய தேர்வாணையக்குழு (UPSC.) நடத்தும் 2009-ஆம் அண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் (I.A.S., I.P.S.) பூர்வாங்கத் தேர்வு எழுதுவதற்கு, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சிக் காலம்: இதற்கான பயிற்சிகள் 2008, டிசம்பர் மாதம் தொடங்கி 6 மாதங்களுக்கு நடைபெறும். ஏற்கனவே இம்மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் அல்லது விண்ணப்பித்திருந்தவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது.

பயிற்சிகள் முழுநேரம், பகுதி நேரம் என இரண்டு வகைகளாக அளிக்கப்படுகிறது. முழுநேரப் பயிற்சியில் சேருவோருக்கு தங்கும் வசதிகள் செய்து தரப்படும்.

தகுதிகள்: பயிற்சியில் சேர விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் 1.8.2009 தேதிப்படி குறைந்தபட்ச வயது 21 ஆகும்.

இதர வகுப்பினர் 30 வயதுக்குட்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்- கிறிஸ்தவர், முஸ்லீம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் 33 வயதுக்குட்பட்டவராகவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

கட்டணம்: விடுதியில் தங்கிப் படிப்போருக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படும். எனினும் இதர வகுப்பினர் முழு பயிற்சிக் காலத்திற்கும் ரூ. 1000/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

பகுதி நேரம், மாலை நேரப்பயிற்சி பெறுவதற்கு பொதுப் பாடப் பயிற்சிக்கு ரூ. 1000/-, விருப்பப் பாடத்திற்கு ரூ. 500/- கட்டணமாகச் செலுத்த வேண்டும். பயிற்சி நேரம் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை. இவர்களுக்கு உணவு, விடுதி வசதி கிடையாது.

விடுதி வசதிகள்: ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்- கிறிஸ்தவர்- முஸ்லீம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் ஆகியோரின் பெற்றோர்/ பாதுகாவலர்/ தனது ஆண்டு வருமானம் ரூ. 1,00,000/-க்கு மிகாமல் இருந்தால், அவர்களுக்கு உணவுக் கட்டணத் தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதர மாணவர்கள் மாதந்தோறும் உணவுக் கட்டணமாக ரூ. 800/செலுத்த வேண்டும்.

தேர்வு மையங்கள்: சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தர்மபுரி மற்றும் சிவகங்கை ஆகிய மையங்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதலாம்.

விண்ணப்பம் அனுப்பும் முறை: பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஜாதி மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2, சுய முகவரி எழுதப்பட்ட ரூ.5 அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். இதில் ஒரு புகைப்படத்தை விண்ணப்பத்தின் வலதுபக்க மூலையில் ஒட்ட வேண்டும்.

விண்ணப்பங்களை 'முதல்வர், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், 225, 2வது அவின்யூ, அண்ணா நகர் மேற்கு, சென்னை- 600 040' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான கடைசி நாள் 30.09.2008.

நுழைவுத் தேர்வு: தகுதி உடையவர்களுக்கு 9.11.2008 அன்று காலை 10.30 மணிக்கு, மேற்கண்ட மையங்களில் 2 மணி நேர அளவிலான நுழைவுத் தேர்வு நடைபெறும். இந்திய வரலாறு, பொருளாதாரம், இந்திய அரசியல், புவியியல், கணக்கு, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றில் இருந்து கொள்குறி வினாக்கள் கேட்கப்படும். தேர்வுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படாது.

மேலும் விவரங்களுக்கு, 'சிவில்சர்வீஸ்கோச்சிங்.காம்' இணையதளத்தை பார்க்கலாம்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments