Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ.ஆ.ப. நேர்முகத் தேர்வை தாய் மொழியில்! ம.தே.ஆ. முடிவு

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2011 (16:19 IST)
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட மத்திய அரசுப் பணித் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் தாங்கள் தாய் மொழி உட்பட தாங்கள் விரும்பும் இந்திய மொழி ஏதாவது ஒன்றில் நேர்காணல் தேர்வை எதிர்கொள்ளலாம் என்று மத்திய அரசுப் பணித் தேர்வாணம் தெரிவித்துள்ளது.

சித்தரஞ்சன் குமார் என்ற மாணவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல மனுவில், தான் இ.ஆ.ப.தேர்வை ஆங்கில மொழியில் எழுதியதால், அம்மொழியில்தான் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. தற்போது நடைமுறையில் இந்த விதிமுறையின் காரணமாக தாய் மொழியில் தங்கள் திறனை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பை சாதாரண வகுப்புகளில் இருந்து வரும் மாணவர்கள் இழக்கின்றனர்.

எனவே நேர்காணலை தாய் மொழியில் எதிர்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மொஹித் சென், நீதிபதி ஜி.எஸ்.காட்போலே ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு இந்த மனுவை விசாரித்து, இது தொடர்பாக மத்திய அரசுப் பணி தேர்வாணையம் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த ம.தே.ஆ.வரும் ஆண்டில் இருந்து இ.ஆ.ப. எழுத்துத் தேர்வில் பங்கேற்கும்போது மொழித் தாளை எந்த மொழியில் எழுதுகிறார்களோ அதே மொழியில் அவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக ம.தே.ஆ. அமைத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரையின்படியே இம்முடிவுற்கு வந்துள்ளதாகவும் தனது மனுவில் கூறியுள்ளது.

ம.தே.ஆ. அளித்துள்ள மனுவின்படி மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments